dark_mode
Image
  • Friday, 09 January 2026

திருமாவை பொது தொகுதியில் ஆளும் கட்சி நிற்க வைக்குமா? சீமான் கேள்வி

திருமாவை பொது தொகுதியில் ஆளும் கட்சி நிற்க வைக்குமா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் நேற்று அளித்த பேட்டி:

நான்கரை ஆண்டாக போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தலின்போது ஓய்வூதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இது, தி.மு.க., அரசின் ஓட்டு அறுவடை என்பதை காட்டுகிறது. உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், முன்னரே அறிவித்திருக்க வேண்டும்.

இந்த அறிவிப்பால், மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும். துாய்மை பணியாளர்கள் நீண்ட நாட்கள் போராடி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன? அரசுக்கு வரி, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே உள்ளது.

தி.மு.க., அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றும், மாநிலத்தில் எந்த திட்டமும் சிறப்பாக நிறைவேறவில்லை. பள்ளி, கல்லுாரி வாசல் வரை போதை பொருட்கள் விற்பனை சென்றுவிட்டது. வட மாநில இளைஞர்கள் வருகையும், தமிழகத்தில் போதை பொருள் வர காரணமாக உள்ளது.

கூட்டணிக்கு வந்தால், ஆட்சியில் பங்கு தருவதாக கூறுவது த.வெ.க., தலைவர் விஜயின் பெருந்தன்மை. அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாழ்த்தப்பட்டவர்களை முக்கிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்த்தார். அதை, தி.மு.க., அரசு செய்யுமா? விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை, பொது தொகுதியில் நிற்க வைக்குமா? இவ்வாறு அவர் கூறினார்.

related_post