dark_mode
Image
  • Tuesday, 17 March 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்..!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்..!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்

பாரபட்சம் இல்லாத தேர்தல் பணியை மேற்கொள்ள வலியுறுத்தல்

🔸 இந்த ஆய்வுக் கூட்டத்தில்..
▫️ சரித்திர பதிவேடு குற்றவாளியை கண்காணித்தல், நன்னடத்தை பிணை பெறுதல்
▫️ முந்தைய தேர்தல் வழக்குகளில் தொடர்பு உடையவர்களை கண்காணித்தல்
▫️ முறையான கணக்கு காட்டப்படாத பண பரிமாற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல்
▫️ பாரபட்சம் இன்றி தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
▫️ பிரச்சினைக்குரிய இடம், நபர்கள் அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல்
▫️பறக்கும் படையினரை முறையாக கையாளுதல்,
▫️ எல்லையோர சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா இயங்குவதை உறுதி செய்தல்
▫️ சோதனைசாவடிகளில் தேர்தல் ரீதியிலான வாகன சோதனையை மேற்கொள்ளுதல்
▫️ சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல்
▫️ தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்

என்பன போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.

🔸இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்பிரமணியன், அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

related_post