dark_mode
Image
  • Saturday, 14 February 2026

கூட்டணி யாரும் வரல!... இன்று சேலத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?...

கூட்டணி யாரும் வரல!... இன்று சேலத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தவெக மாநாட்டில் பார்க்க முடியும்.. அப்படி இல்லை என்றால் தவெக தொடர்பான முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுவார்.. இந்த இரண்டு இடங்களை தவிர வேறு எங்கும் அவரை பார்க்க முடியாது. இப்படி தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை செய்து வருகிறார் விஜய். அவர் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதில்லை. போராட்டங்கள் நடத்துவதில்லை.. செய்தியாளர்களை சந்திப்பதில்லை என பல விமர்சனங்கள் அவர் மீது இருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதில்லை..

 

கடந்த ஈரோடு பொதுக்கூட்டத்தில் கடைசியாக பேசியபோது ‘திமுக ஒரு தீய சக்தி’ என கடுமையாக விமர்சித்தார். மேலும் அதிமுகவை அடிமை ஊழல் கட்சி எனவும் பேசினார். எனவே முன்பு வரை திமுக மட்டுமே விஜயை திட்டிக் கொண்டிருந்தது. தற்போது அதிமுகவினரும் விஜயை திட்ட துவங்கி விட்டார்கள். கரூர் சம்பவத்தில் கூட விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விஜய் அப்படி பேசியதற்கு பின் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்..

 

இந்நிலையில்தான், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் பகுதியில் உள்ள மைதானத்தில் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசவிருக்கிறார். இந்த கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நுழைவுச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என காவல்துறை தெரிவித்திருக்கிறது..

தேர்தல் நெருங்கும் நிலையில் இதுவரை தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. எனவே, தவெக தனியாக போட்டியிடும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

related_post