dark_mode
Image
  • Saturday, 10 January 2026

கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது; விஜய் மீது சரத்குமார் குற்றச்சாட்டு

கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது; விஜய் மீது சரத்குமார் குற்றச்சாட்டு

துாத்துக்குடி: 'சொந்த கட்சியின் நிர்வாகிகளிடம் குறையை கேட்காதவர், தலைவராக இருக்க முடியாது' என த.வெ.க., தலைவர் விஜய் மீது, பா.ஜ., மூத்த தலைவர் நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டினார்.

 

துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் போதை பழக்கத்தால் குற்றச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எந்தவொரு நல்ல திட்டத்தையும் தி.மு.க., வரவேற்றதே இல்லை.

த.வெ.க., தலைவர் விஜயை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்திக்காத அந்த கட்சி, தற்போதுதான் களத்திற்கே வந்துள்ளது. முழுமையான அரசியல் கட்சி தலைவராக விஜய் இருப்பாரா? அரசியல் கட்சியை நடத்துவாரா? மாட்டாரா? என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும்.

த.வெ.க., தலைவர் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்திய, அக்கட்சியின் பெண் நிர்வாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் காரை மறித்தபோது மனிதாபிமான அடிப்படையில், கீழே இறங்கி இரண்டு வார்த்தைகள் விஜய் பேசி இருந்தாலே பிரச்னை முடிந்திருக்கும். சொந்த கட்சி நிர்வாகிகளின் குறையை கேட்பவர்தான் நாயகனாகவும், கட்சி தலைவராகவும் இருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

related_post