dark_mode
Image
  • Sunday, 05 July 2026

இன்ஸ்டாகிராமில் சர்ச்சை விளம்பரங்கள்.! மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்.!

இன்ஸ்டாகிராமில் சர்ச்சை விளம்பரங்கள்.! மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்.!

புதுடெல்லி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் வெளியாகிய சில விளம்பரங்கள் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை கொண்டிருப்பதுடன், தடை செய்யப்பட்ட டெலிகிராம் சேனல்களைப் பரிந்துரைப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தகைய விளம்பரங்களை உடனடியாக அகற்றுவதுடன், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுப்பதும் அரசின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத உள்ளடக்கங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு இடமளிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை அகற்றுவது, உள்ளடக்கக் கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து மெட்டா நிறுவனம் என்ன விளக்கம் அளிக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

related_post