dark_mode
Image
  • Monday, 21 September 2026

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (ஆகஸ்ட் 21 மற்றும் 22) குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  

related_post