dark_mode
Image
  • Thursday, 14 August 2025

இந்திய இறையாண்மைக்கு சவால் - எடப்பாடி பழனிசாமி

இந்திய இறையாண்மைக்கு சவால் - எடப்பாடி பழனிசாமி
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது. இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன் இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். என தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு சவால் - எடப்பாடி பழனிசாமி

related_post