சற்று முன் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் கருப்பு கொடி-கல்வீச்சு! அதிமுகவினர் செயலால் நெல்லை சந்திப்பில் பரபரப்பு

நெல்லை சந்திப்பு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அங்கு பரப்புரையில் ஈடுபட்டபோது, திடீரென எடப்பாடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. அப்போது அதிமுகவினர் சிலர், கருப்பு காட்டியவர்களுடன் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டனா். மேலும் அவர்கள் மீது அதிமுகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நெல்லை சந்திப்பு பகுதியே போர் களமாக மாறியது.
தமிழ்நாடு சட்டசபைக்கு 2026ம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனா். தற்போது கூட்டணி விரிசல், புதிய கட்சி வருகை போன்றவை இந்த முறை தேர்தல் களத்தில் புதிய முடிவுகளை கொடுக்கலாம் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
இதற்கிடையே அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டன. எனினும் இந்த கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் என்னென்ன என்று அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக சுற்றுப்பணத்தை மேற்கொண்டு வருகிறது. கொங்கு மண்டலம் முதல் தென் தமிழக எல்லை வரை பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டார். தற்போது நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற சுற்றுப்பயணங்கள் அனைத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் அவர் பரப்புரை செய்தபோது, ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி உள்ளனா். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், அவர்களுடன் வாக்குவாதம் செய்தனா். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனா்.
எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டியவர்கள் யார் ?
இதில் பரப்புரைக்கு வந்த பலரும் காயமடைந்தனா். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் நெல்லை பரப்புரையில் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியவர்கள் யார், எதற்காக காட்டினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.முன்னதாக சுற்றுப்பயணத்தின்போது விவசாயிகள் உள்பட பலதரப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறார். மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று கூறி வருகிறார்.
ஓ.பன்னீர் செல்வம்
மேலும் நேற்று இரவு, நெல்லைக்கு சென்றபோது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் எச் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனா். அப்போது பாஜக அதிமுக இடையேயான தேர்தல் வியுகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும் அவரது அறிக்கைகள் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரை தாக்கி பேசும் வகையில் உள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.