dark_mode
Image
  • Thursday, 14 August 2025

அன்புமணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் - பாமக எதை நோக்கி செல்கிறது?

அன்புமணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் - பாமக எதை நோக்கி செல்கிறது?

பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!

உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். அதில், அவர் தலைவராக ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடியாக ராமதாஸ் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 

அன்புமணி அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறார்

ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். ராமதாஸ் மே 30ஆம் தேதி முதல் தலைவராக இருக்கிறார். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அன்புமணி எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுகிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களை பதவி நீக்கம் செய்து வருகிறார். மேலும், அன்புமணி மேற்கொண்டுள்ள 100 நாள் நடை பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் காரணமாக, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்!

அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட செயல் தலைவர் பதவியை அவர் மதிக்கவில்லை. போட்டி தலைவரைப் போல செயல்படுகிறார். கட்சியின் விதிகளை மீறி செயல்படும் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அல்லது கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அன்புமணி சுய லாபத்துக்காக செயல்படுகிறார். அவரது நடவடிக்கைகளை கட்சி ஏற்கவில்லை.
 

related_post