இஞ்சி இடுப்பழகி ஆக வேண்டுமா இதோ Tips..!!

இஞ்சி இடுப்பழகியாக சில உணவு குறிப்புகள் :
கொட்டை நீக்கிய நெல்லிக்காயில் இருந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினசரி காலையில் குடித்து வந்தால் இடுப்பில் படிந்திருக்கும் கொழுப்பு குறையும், உடல் இளைக்கும், இடுப்பு அழகாகும். அதிகப்படியான கொழுப்பை குறைக்க சமையலில் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்தலாம்.
உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவும். அதேபோல ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அதிகம் உள்ளன. பித்தநீர் சுரக்க உதவும் கேரட் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
அதேபோல், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன. இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். இவற்றில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைவாக உள்ளன, இவற்றை தவிர்த்தாலே உடல் எடை கூடாமல் அழகை பராமரிக்கலாம்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description