dark_mode
Image
  • Tuesday, 30 June 2026

அமைச்சர் சரத்குமார் விவகாரம்: போதைப்பொருள் பயன்படுத்தியதாக புதிய புகார்; காவல்துறை விசாரணை தொடக்கம்

அமைச்சர் சரத்குமார் விவகாரம்: போதைப்பொருள் பயன்படுத்தியதாக புதிய புகார்; காவல்துறை விசாரணை தொடக்கம்

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் தொடர்பாக இணையத்தில் பரவிய பழைய கிரிக்கெட் போட்டி காணொளி மீண்டும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில் அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை அமைச்சர் மறுத்து, தனது குழந்தைக்கு மாத்திரையை உடைத்து கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுக இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக இளைஞரணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சென்னையின் எழும்பூர் பகுதியில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சரண்யா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post