dark_mode
Image
  • Friday, 26 June 2026

21 ஆண்டுகால மின்துறை வெள்ளை அறிக்கை: அதிமுக, திமுக ஆட்சிகளின் நிர்வாகக் குறைபாடுகள் வெளிச்சம் – அமைச்சர் நிர்மல்குமார்

21 ஆண்டுகால மின்துறை வெள்ளை அறிக்கை: அதிமுக, திமுக ஆட்சிகளின் நிர்வாகக் குறைபாடுகள் வெளிச்சம் – அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடந்த 21 ஆண்டுகால செயல்பாடுகள் மற்றும் நிதிநிலையை ஆய்வு செய்யும் வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு நிர்வாக மற்றும் நிதி சீர்கேடுகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்.

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் ₹2,47,130 கோடி கடன் சுமையைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிலைக்கு வழிவகுத்த காரணிகளை அறிக்கையில் விளக்கியுள்ளதாக தெரிவித்தார்.

2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறையில் மட்டும் ₹50,301 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறிய அமைச்சர், போதிய திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மை குறைபாடுகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டினார்.

அதேபோல், 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தையும் விமர்சித்த அவர், அந்த காலகட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்கான புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை எனத் தெரிவித்தார். புதிய திட்டங்கள் இல்லாத நிலையிலும், மின்துறையின் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், மனிதவள மேலாண்மையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக பணியாளர் நியமன நடைமுறைகள் பல ஆண்டுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்துறையை நிதி மற்றும் நிர்வாக ரீதியாக மீட்டெடுக்க தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

related_post