அனைத்துலக வள்ளலார் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 8 அறிவிப்புகள்..!
அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முன்னிட்டு, திருவருட்பிரகாச வள்ளலாரின் புகழை போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் பின்வருமாறு:
மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு, அங்கு திருவருட்பா இசைப்பயிற்சி அளிக்கப்படும்.
வடலூரில் வள்ளலார் பெயரில் பிரம்மாண்ட மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.
வள்ளலாரின் ‘Spiritual Alchemy’ புத்தகம் அறநிலையத்துறை மூலம் வெளியிடப்படும்.
வள்ளலார் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் அரசு விழா கொண்டாடப்படும்.
மேட்டுக்குப்பம், மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்.
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அமையவுள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்.
சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மையம் நிறுவப்படும்.
வள்ளலாரின் தனிப்பெருங்கருணை மற்றும் சன்மார்க்க கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இந்த திட்டங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.