அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோவில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மதுசூதனனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகியதால், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மதுசூதனின் மனைவி ஜீவா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description