dark_mode
Image
  • Saturday, 30 November 2024

அதிமுகவில் நடக்கும் பிரச்சனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை- அண்ணாமலை

அதிமுகவில் நடக்கும் பிரச்சனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை- அண்ணாமலை

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "உச்சநீதிமன்றத்தில் தெளிவாக ஒரு தீர்ப்பு வந்துள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையை 139 அடி தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடி வரும்போதே அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர் 6 மாவட்டங்களுக்கு பயன் தரக்கூடியது. எப்போதுமே முல்லைப் பெரியாறு அணையின் ஷட்டரை திறக்கும்போது தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர் அங்கு இருப்பது மரபு. ஆனால் தமிழகத்தில் இருந்து யாரும் செல்லாத நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு சரியான காரணம் யாரும் கூறவில்லை. இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.மாநில அரசின் உரிமையை மீட்டு அதை நிலையாக வைத்திருப்பது மாநில அரசினுடைய மிக முக்கிய கடமைகளில் ஒன்று. நேற்று மாநில அரசு இதனை தவற விட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 136 அடியில் இருந்து 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க கூறியிருக்கும் போது கேரள அரசு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட என்ன அவசரம் ஏற்பட்டது.

கடந்த பத்து நாளாக கேரள நடிகர்கள் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் ஏன் இவ்வாறு பீதியை கிளப்புகின்றனர். கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருப்பதாலும் தமிழகத்தில் திமுக கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் நம்முடைய உரிமைகளை தமிழக முதலமைச்சர் விட்டுக்கொடுக்க உள்ளாரா என்பது என்னுடைய கேள்வி? முல்லைப் பெரியாறு அணை கதவு திறக்கும் போது நம்முடைய தேனி மாவட்ட ஆட்சியரும் அமைச்சரும் ஏன் அங்கு செல்லவில்லை? இது மிக முக்கியமான விஷயம். பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் 137 அடியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைவது தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நேற்று கேட்கும்போது எங்களுடைய அதிகாரிகள் அங்கு இருந்தனர் என்று பதில் சொல்லினர். ஆனால் இன்று அவர்கள் பேசும்போது எங்கள் அனுமதியை பெற்று தான் அணையைத் திறந்தார்கள் என்று சொல்கின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நூத்தி முப்பத்தி ஒன்பது அடி வரும்போது அணையை திறந்து இருக்கலாம் ஆனால் அவசர அவசரமாக அணையை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன குறிப்பாக கேரளாவில் நடிகர்கள் அணையின் பலம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர் இதையெல்லாம் கூட்டி கழித்துப் பார்க்கும்போது நமது உரிமையை மாநில அரசு விட்டுக்கொடுத்து உள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. துறை அமைச்சரின் விளக்கமும் தெளிவாக இல்லை. வைகை அணை தூர்வார படாததால் அணையில் வண்டல் மண் குவிந்துள்ளது. அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்தால் மட்டுமே நீரின் அளவை உயர்த்த முடியும்.

6 மாவட்ட நீர் ஆதாரமான வைகை அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை எடுத்து அங்கு நீரின் அளவை 7 டிஎம்சி ஆக உயர்த்த வேண்டும். வைகை அணையில் தண்ணீர் இருக்கும் போதே ஜப்பானிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை எடுக்க வேண்டும். மேலும் வைகை அணையின் நீர்மட்டத்தை ஐந்திலிருந்து ஏழு டிஎம்சி ஆக உயர்த்த வேண்டும் மாநில அரசு அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் அதிகளவில் பேருந்துகளில் பயணம் செய்ய உள்ளனர் குறிப்பாக மாணவர்கள் முழுமையான அளவில் தடுப்பூசி செலுத்தாததால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு பேருந்துகளை காட்டிலும் தனியார் பேருந்துகளில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை மாணவர்களின் வசதிக்காக உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் எந்த விஷயமானாலும் அதற்கு பாஜக தான் காரணம் என்று சொல்லக்கூடிய கும்பல் ஒன்று உள்ளது. தமிழகத்தில் மழை பெய்யாததற்கும் பாஜகதான் காரணம், மாடு சரியாக புல் சாப்பிடவில்லை என்பதற்கும் பாஜகதான் காரணம் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதிமுகவில் குழப்பம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை, அவர்களுடைய உட் கட்சியில் சில தலைவர்கள் கருத்து சொல்கிறார்கள். அந்தக் கட்சியின் தலைவர் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் நடக்கும் சில விஷயங்களில் பாரதிய ஜனதா கருத்து சொல்வது சரியாக இருக்காது கருத்துச் சொல்லவும் மாட்டோம். அது அவர்கள் கட்சி பிரச்சனை. அதற்கும் பாரதிய ஜனதாவுக்கு என்ன சம்பந்தம்?" என தெரிவித்தார்.

அதிமுகவில் நடக்கும் பிரச்சனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை- அண்ணாமலை

comment / reply_from

related_post

newsletter

newsletter_description