dark_mode
Image
  • Sunday, 24 August 2025
பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் கர்ப்பம்:- திரையுலகினர்,ரசிகர்கள் வாழ்த்து

பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் கர்ப்பம்:- திரையுலகினர்,ரசிகர்கள் வாழ்த்து

பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது. இத்தகவலை சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் பிரபலம் பாடகி ஷ்ரேயா கோஷல். 2002-ல் தேவதாஸ் படத்தில் உள்ள பத்து பாடல்களில் ஐந்து பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஷ்ரேயாவுக்குக் கிடைத்தது. இதனால் ஒரே படத்தில் இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார். முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார். ஷ்ரேயா கோஷல் ஏராளமான தமிழ்ப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். 2002-ல் ஆல்பம் படத்தில் இடம்பெற்ற செல்லமே செல்லம் என்றாயடா பாடலைப் பாடி முதல் பாடலிலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களைப் பெற்றார்.

பிப்ரவரி 5, 2015-ல் காதல் திருமணம் செய்தார். 10 வருடக் காதல். ஷ்ரேயாவின் கணவர், தொழிலதிபர் ஷிலாதித்யா.

இந்நிலையில் தான் கர்ப்பமாக உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பாடகி ஷ்ரேயா கோஷல் அறிவித்துள்ளார். குழந்தை விரைவில் பிறக்கப் போகிறது. உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எங்களுக்குத் தேவை என அவர் இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளார்.

இதையடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் ஷ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

related_post