dark_mode
Image
  • Sunday, 24 August 2025
நானியின் 'வி' படத்தை நீக்க அமேசானுக்கு உத்தரவு

நானியின் 'வி' படத்தை நீக்க அமேசானுக்கு உத்தரவு

அனுமதியில்லாமல் நடிகையின் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரத்தில் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் இருந்து வி திரைப்படத்தை நீக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பரில் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியான படம் வி. இதில் நானி, அதிதி ராவ், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் ஒரு காட்சியில் பாலியல் தொழிலாளார்கள் குறித்து பேசும் போது, அதில் சில புகைப்படங்கள் வரும். அந்த காட்சியில் அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நடிகை சாக்‌ஷி மாலிக் என்பவர் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அவர், கடந்த 2107-ம் ஆண்டு நடைபெற்ற போட்டோஷுட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக என்னிடம் படக்குழுவினர் யாரும் அனுமதி பெறவில்லை. பாலியல் தொழிலாளர்கள் குறித்து பேசும் போது எனது புகைப்படம் படத்தில் காட்டப்படுகிறது. இதனால் என் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 'வி' பட தயாரிப்பு நிறுவனம் ரு. 30 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என மனுவில் நடிகை சாக்‌ஷி மாலிக் குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக விசாரித்து வந்த மும்பை நீதிமன்றம், அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சாக்‌ஷி மாலிக் வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. படத்தில் சாக்‌ஷி மாலிக் புகைப்படம் வரக்கூடிய காட்சிகள், அதுதொடர்பான வசனங்கள், சப்டைட்டில்கள் என அனைத்து வடிவங்களும் நீக்கப்பட வேண்டும். இந்த புகைப்படத்தை வெறுமனே மழுங்கடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. படத்தில் சாக்‌ஷி மாலிக் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்படும் வரை, வி படத்தை ஓடிடி மட்டுமில்லாது எந்த ஒரு தளத்திலும், ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

மும்பை நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவை வரவேற்றுள்ள நடிகை சாக்‌ஷி மாலிக், தனக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

related_post