dark_mode
Image
  • Sunday, 24 August 2025
'சரவணா ஸ்டோர்ஸ்' அருள் - வைரல் போட்டோஸ்

'சரவணா ஸ்டோர்ஸ்' அருள் - வைரல் போட்டோஸ்

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பலருக்கும் பரிட்சியமானவர். அவர் கடையின் விளம்பரத்தில் உள்ளூர் முதல் வெளிநாட்டு அழகி வரை ஆடி வந்த அவர், தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

தற்போது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்கள் எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2019-ல் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அருள் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.

 

'சரவணா ஸ்டோர்ஸ்' அருள் - வைரல் போட்டோஸ்

இந்நிலையில் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் ரோபோ ஷங்கரை ரவுடிகள் சிலர் அடிக்க, அவர்களை தடுப்பதுடன், அவர்களை அடித்து தும்சம் செய்கிறார் அருள். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு இப்படத்தின் பாடல் காட்சிகள் ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

'சரவணா ஸ்டோர்ஸ்' அருள் - வைரல் போட்டோஸ்

related_post