ஆஸ்கர் போட்டிக்கான தகுதிப் பட்டியலில் சூரரைப்போற்று

ஆஸ்கருக்கான தகுதி பட்டியலில் மொத்தமுள்ள 366 படங்களில் சூரரைப்போற்று படமும் இடம்பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூரரைபோற்று திரைப்படம் ஆஸ்கார் குழு தேர்வு செய்துள்ள ஆஸ்கருக்கு தகுதி வாய்ந்த சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்துள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 366 படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படமாக சூரரைப் போற்று திரைப்படம் அமைந்துள்ளது. சிறந்த நடிகருக்கு சூர்யா, ஆஸ்கர் விருதுக்கு வாக்களிக்க வருகிற 5 ஆம் தேதிலியிருந்து 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இறுதி அறிவிப்பு மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும்.