dark_mode
Image
  • Saturday, 12 September 2026

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி.!

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி.!

ஹார்முஸ் ஜலசந்தி அருகிலுள்ள ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல், மத்திய கிழக்கில் புதிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈரானின் நான்கு தாக்குதல் டிரோன்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பு தகவல் வெளியிட்ட நிலையில், உடனடியாக ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை முழு அளவில் செயல்படுத்தி உயர் எச்சரிக்கை நிலையை அறிவித்தது.

இதற்கு பதிலடியாக, சில மணி நேரங்களுக்குள் அமெரிக்க ராணுவ விமான தளத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா மீண்டும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற அமெரிக்கா தொடர்புடைய ஐந்து சர்வதேச எண்ணெய் கப்பல்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் மீது எந்த ஒரு நாட்டின் ஆதிக்கத்தையும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், இந்த மோதல் சர்வதேச அரசியல் மற்றும் எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

related_post