dark_mode
Image
  • Tuesday, 21 July 2026

ராசிபலன் 22-07-2026 புதன்கிழமை

ராசிபலன் 22-07-2026 புதன்கிழமை

ராசிபலன் 22-07-2026 புதன்கிழமை 

மேஷம்
ஜூலை 22, 2026

மனைவி வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு ஏற்படும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூலை 22, 2026

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணம் கைகூடும். அடுத்தவர் பேச்சுகளை நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : எண்ணம் கைகூடும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------


மிதுனம்
ஜூலை 22, 2026

உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------


கடகம்
ஜூலை 22, 2026

சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : முடிவுகள் ஏற்படும்.

---------------------------------------


சிம்மம்
ஜூலை 22, 2026

மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : ஒத்துழைப்பான நாள்.
பூரம் : தேவைகள் நிறைவேறும்.
உத்திரம் : இழுபறிகள் மறையும்.

---------------------------------------


கன்னி
ஜூலை 22, 2026

மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கைகூடிவரும். பொன் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : குழப்பங்கள் விலகும்.
அஸ்தம் : வேறுபாடுகள் விலகும்.
சித்திரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------


துலாம்
ஜூலை 22, 2026

சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த இறுக்கங்கள் குறையும். பாகப்பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் சுபச் செய்திகள் ஏற்படும். சமூக பணிகளில் அனுபவங்கள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : வெற்றிகள் கிடைக்கும்.
விசாகம் : திருப்தியான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 22, 2026

கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
கேட்டை : தெளிவுகள் ஏற்படும்.

---------------------------------------


தனுசு
ஜூலை 22, 2026

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். கணுக்கால் வலிகள் குறையும். வெளியூர் பயணம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சகோதரிகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : ஆதாயம் ஏற்படும்.
பூராடம் : அமைதி ஏற்படும்.
உத்திராடம் : சுபமான நாள்.

---------------------------------------


மகரம்
ஜூலை 22, 2026

மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமையல் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இரவு நேர பணிகளில் சில மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திராடம் : தேடல்கள் உருவாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
ஜூலை 22, 2026

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அவிட்டம் : பொறுமை வேண்டும்.
சதயம் : ஈடுபாடுகள் உண்டாகும்.
பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------


மீனம்
ஜூலை 22, 2026

பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். கல்வியில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------