வெந்து தணிந்தது காடு படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகி உள்ளது.
வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு சென்று டானாகும் முத்துவின் வாழ்க்கை தொகுப்பாக டிரெய்லர் அமைந்துள்ளது. டிரெய்லர் முழுவதும் இயக்குனர் கௌதம் மேனனின் குரல் வாய்ஸ் ஓவராக வருகிறது. ஏ. ஆர். ரஹ்மானின் இசை டிரெய்லரை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.
வெந்து தணிந்தது காடு பாகம் ஒன்று (The Kindling) என டிரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
