மகன் மற்றும் மருமகள் மீது அவதூறாகப் பேசப்படுகிறார்கள் – யூடியூப்பர்களுக்கு எதிராக நெப்போலியன் தரப்பில் போலீசில் புகார்

தனது மகன் மற்றும் மருமகள் மீது அவதூறாக யூடியூபில் சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் நெப்போலியன் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. தமிழ் கலாச்சார பெண்ணைத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நெப்போலியன், நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், திருமணம் ஆன சில நாட்களிலேயே நெப்போலியன் மகன் தனுஷ் உடல்நிலை குறித்தும், அவரது மனைவி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் யூடியூப் உட்பட சில சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, தனுஷுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் டேனியல் ராஜா என்பவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், தனுஷின் உடல்நிலை குறித்தும், அவரது மனைவி அக்ஷயா குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, விரைவில் நெல்லை போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description