கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், அவரது தக்லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கமல்ஹாசன் "மன்னிப்பு கேட்க முடியாது" என்று நாகரிகமாக கூறிவிட்ட நிலையில், இந்த படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கமல்ஹாசன் தனது நெருக்கமானவர்களுடன் ஆலோசனை செய்தபோது, "கர்நாடகாவில் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் 20 கோடி நஷ்டமாகும்" என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கமல்ஹாசன் கொஞ்சமும் வருத்தப்படாமல், "இருபது கோடி நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை; மன்னிப்பு கேட்க முடியாது" என்று கூறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக மற்ற பகுதிகளில் கூடுதலாக ப்ரமோஷன் செய்து வசூலை அதிகப்படுத்த முயற்சி செய்வோம் என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.
கர்நாடகாவில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை; மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.