சிங்கம் 2 முதல் ரெட்ரோ வரை..அதிக வசூல் செய்த சூர்யாவின் டாப் ஐந்து திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் சூர்யா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் சூர்யா ரசிகர்களை இப்படம் முழு திருப்தி செய்தது.
கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. என்னதான் இடையில் சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றாலும் அப்படங்கள் OTT யில் வெளியான படங்கள் தான். எனவே திரையில் சூர்யாவின் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று சில காலம் ஆகிவிட்டது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகப்பெரிய ஏக்கத்தில் இருந்தனர். தற்போது அந்த ஏக்கத்தை ரெட்ரோ திரைப்படம் சற்று போக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
உலகளவில் ரெட்ரோ திரைப்படம் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல் செய்த டாப் ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்
கங்குவா
ஐந்தாவது இடத்தில் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் உள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புற்கு மத்தியில் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் இப்படம் 110 கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது கங்குவா
ரெட்ரோ
நான்காம் இடத்தில் தற்போது ரெட்ரோ திரைப்படம் இருக்கின்றது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான இப்படம் இதுவரை நூறு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இப்படம் நான்காம் இடத்தில் உள்ளது. இனி வரும் நாட்களில் ரெட்ரோ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த நிலை மாறலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது
ஏழாம் அறிவு
சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கும் படம் தான் ஏழாம் அறிவு .ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சூர்யாவின் படமாக இருந்தது. கிட்டத்தட்ட 70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 115 கோடி வரை வசூலித்தது.இதன் மூலம் ஏழாம் அறிவு திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சிங்கம் 2
இரண்டாம் இடத்தில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்படம் உள்ளது. கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற சிங்கம் 2 திரைப்படம் 125 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதன் மூலம் சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது சிங்கம் 2 திரைப்படம்

இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக 24 திரைப்படம் உள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டைம் ட்ராவல் கதைக்களத்தில் வெளியான இப்படம் உலகளவில் 150 கோடி வரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description