dark_mode
Image
  • Monday, 05 October 2026

ரேஷன் பருப்பு கொள்முதல் விவகாரம்: அரசுக்கு ரூ.187 கோடி மிச்சமா.? – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ரேஷன் பருப்பு கொள்முதல் விவகாரம்: அரசுக்கு ரூ.187 கோடி மிச்சமா.? – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ரேஷன் பருப்பு கொள்முதல் விவகாரம்: அரசுக்கு ரூ.187 கோடி மிச்சமா? – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை குறைந்த கொள்முதல் விலையில் வாங்கியதன் மூலம் சுமார் மூன்று மாதங்களில் ரூ.187 கோடி வரை அரசுக்கு மிச்சம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் கிலோ ரூ.109-க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பு, தற்போதைய ஆட்சியில் ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்களை விமர்சித்துள்ளார்.

மேலும், துவரம் பருப்பின் கொள்முதல் விலை குறைந்ததற்கான பின்னணி தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும், கடந்த ஆட்சியிலேயே கொள்முதல் விலை படிப்படியாக குறைக்கப்பட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பாமாயில் கொள்முதல் குறித்தும் விமர்சனம்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் கொள்முதல் விலை தொடர்பாகவும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆட்சியில் வெவ்வேறு காலகட்டங்களில் குறைந்த விலையில் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் லிட்டர் ரூ.154.99-க்கும், தற்போது ரூ.148-க்கும் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த விலையில் கொள்முதல் செய்திருக்க வேண்டிய நிலையில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ரேஷன் பொருட்களின் கொள்முதல் விலை தொடர்பான முழுமையான விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

related_post