dark_mode
Image
  • Saturday, 30 November 2024

ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்- நடிகர் சூர்யா

ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்- நடிகர் சூர்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்த கோரிக்கையை அடுத்து ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

 

ஒடுக்குமுறைக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என ஜெய்பீம் திரைப்படத்தை புகழ்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பார்வதிக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய உள்ளதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த டெபாசிட் தொகையிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி பெற்றுக்கொள்ள வழி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இனிவரும் வாழ்நாள் முழுதும் இது பயனளிக்கும் எனவும் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வதியின் காலத்திற்கு பிறகு, அவரது வாரிசுகளுக்கு இத்தொகை சேரும்படி செய்யலாம் என தெரிவித்துள்ள சூர்யா, குறவர் பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்காக உதவுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

ஜெய்பீம் திரைப்படம் வெளியாவதற்க்கு முன்பே, இதுகுறித்து களஆய்வு மேற்கொண்ட நியூஸ் 7 தமிழ் செய்திக்குழு, ஜெய்பீம் உண்மைக்கதை என்னும் பெயரில் பார்வதியின் தற்போது நிலையை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்- நடிகர் சூர்யா

comment / reply_from

related_post

newsletter

newsletter_description