dark_mode
Image
  • Wednesday, 25 March 2026

ராசிபலன் 25-03-2026 புதன்கிழமை

ராசிபலன் 25-03-2026 புதன்கிழமை

ராசிபலன் 25-03-2026 புதன்கிழமை

மேஷம்
மார்ச் 25, 2026

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------


ரிஷபம்
மார்ச் 25, 2026

செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

கிருத்திகை : சோர்வுகள் குறையும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


மிதுனம்
மார்ச் 25, 2026

பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : பேச்சுக்களில் கவனம்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


கடகம்
மார்ச் 25, 2026

பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த சலசலப்புகள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம் : கையிருப்பு குறையும்.
ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------


சிம்மம்
மார்ச் 25, 2026

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரம் : அனுகூலம் ஏற்படும்.
உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.

---------------------------------------


கன்னி
மார்ச் 25, 2026

தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல ஒரு மாற்றத்தை தரும். விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------


துலாம்
மார்ச் 25, 2026

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
சுவாதி : விரயங்கள் உண்டாகும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 25, 2026

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி பொறுமையுடன் செயல்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : கனிவு வேண்டும்.
அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கேட்டை : பொறுமையுடன் செயல்படும்.

---------------------------------------


தனுசு
மார்ச் 25, 2026

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் உதவிகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : பயணங்கள் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : பொறுப்புக்கள் மேம்படும்.

---------------------------------------


மகரம்
மார்ச் 25, 2026

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுகூலமான சூழல்கள் அமையும். தடைப்பட்ட சில காரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------


கும்பம்
மார்ச் 25, 2026

தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணி புரியும் இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். பூர்விக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

அவிட்டம் : பயணங்கள் அதிகரிக்கும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------


மீனம்
மார்ச் 25, 2026

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். விவசாயம் துறைகளில் மேன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------