dark_mode
Image
  • Wednesday, 18 March 2026

ராசிபலன் 18-03-2026 புதன்கிழமை

ராசிபலன் 18-03-2026 புதன்கிழமை

ராசிபலன் 18-03-2026 புதன்கிழமை

மேஷம்
மார்ச் 18, 2026

உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். வரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : அனுபவங்கள் ஏற்படும்.
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 18, 2026

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். திடீர் வாய்ப்புகள் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத் துறையில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தாமதம் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 18, 2026

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். மருத்துவத் துறையில் முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகங்கள் ஏற்படும்
திருவாதிரை : ஆர்வம் இன்மை ஏற்படும்
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்
---------------------------------------


கடகம்
மார்ச் 18, 2026

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சமூகமும் பற்றிய சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : சோர்வுகள் ஏற்படும்.
---------------------------------------


சிம்மம்
மார்ச் 18, 2026

மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். கடினமான விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல்கள் அமையும். வர்த்தக விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். திடீர் வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : இலக்குகள் பிறக்கும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------


கன்னி
மார்ச் 18, 2026

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இருந்த தாமதங்கள் விலகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளிடம் சில நெருக்கடியான சூழல்கள் உருவாகும். அரசுப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். போட்டி தேர்வுகளில் இருந்த மந்த நிலை மறையும். சுகம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : மந்த நிலை மறையும்.
---------------------------------------


துலாம்
மார்ச் 18, 2026

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வேலை ஆட்களால் ஆதரவான சூழல் உருவாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விவேகமான செயல்பாடுகளால் மதிப்புகளை உருவாக்குவீர்கள். வர்த்தக விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : வெற்றிகரமான நாள்.
சுவாதி : தன்னம்பிக்கை பிறக்கும்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 18, 2026

நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். இழந்த பொருளை மீட்பதற்கான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி விஷயங்களில் இருந்த தடுமாற்றம் குறையும். நண்பர்களின் அறிமுகங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.
அனுஷம் : தடுமாற்றம் குறையும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------


தனுசு
மார்ச் 18, 2026

சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வாகனங்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் உருவாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். மற்றவரிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். அன்பு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

மூலம் : மாற்றம் பிறக்கும்.
பூராடம் : ஆலோசனை கிடைக்கும்.
உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.
---------------------------------------


மகரம்
மார்ச் 18, 2026

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மதிப்புகள் உயரும். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். வாக்கு சாமர்த்தியத்தின் மூலம் சாதாரணமான சூழல்களை உருவாக்குவீர்கள். கொள்கை பிடிப்பு குணம் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 18, 2026

நீண்ட நாள் எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த சில வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் ஏற்பட முடியும். கவலை விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்

அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------


மீனம்
மார்ச் 18, 2026

உயர்கல்வியில் சில தடுமாற்றங்கள் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உறவுகளுடன் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பொருட்கள் விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூர பயணம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வாசனை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : தடுமாற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------