ராசிபலன் 17-07-2026 வெள்ளிக்கிழமை
ராசிபலன் 17-07-2026 வெள்ளிக்கிழமை
மேஷம்
ஜூலை 17, 2026
வருமானத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். திறமையை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் அமையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 17, 2026
குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமினமை குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
கிருத்திகை : தெளிவுகள் உண்டாகும்.
ரோகிணி : ஆரோக்கியத்தில் கவனம்.
மிருகசீரிஷம் : ஆர்வமினமை குறையும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 17, 2026
வித்தியாசமான சிந்தனைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அரசு குறித்த சில நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 17, 2026
உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : நம்பிக்கை மேம்படும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 17, 2026
வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். பயண விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 17, 2026
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைவிடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மைகள் உண்டாகும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திரம் : சோர்வுகள் குறையும்.
அஸ்தம் : விட்டுக் கொடுத்து செயல்படவும்.
சித்திரை : ஈடுபாடு மேம்படும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 17, 2026
உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை குறைத்து கொள்ளவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 17, 2026
வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். தனித்து செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் பேராசை இன்றி செயல்படவும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : பயணங்கள் கைகூடும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 17, 2026
உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : வாய்ப்புகள் உருவாகும்.
உத்திராடம் : தாமதம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 17, 2026
துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 17, 2026
செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : தடைகள் விலகும்.
சதயம் : முடிவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பணிகள் சாதகமாகும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 17, 2026
சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் லாபங்கள் மேம்படும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : இன்னல்கள் நீங்கும்.
---------------------------------------