ராசிபலன் 16-07-2026 வியாழக்கிழமை
ராசிபலன் 16-07-2026 வியாழக்கிழமை
மேஷம்
ஜூலை 16, 2026
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
அஸ்வினி : தெளிவுகள் பிறக்கும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 16, 2026
திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பூமி விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.
ரோகிணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 16, 2026
எதிர்பாராத உதவியால் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்த பணிகளில் இழுபறிகள் மறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.
புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 16, 2026
மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பாக பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
பூசம் : விவேகம் வேண்டும்.
ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 16, 2026
சஞ்சலமான சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகன தொடர்பான விடயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்த தன்மை உண்டாகும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : குழப்பங்கள் நீங்கும்.
பூரம் : சுபமான நாள்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 16, 2026
கலைதுறைகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மூத்த உடன் பிறப்புகள் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 16, 2026
பொருளாதார மேன்மையால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயண தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கர்வமின்றி செயல்படுவது மேன்மையை உருவாக்கும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 16, 2026
எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்களால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய விரயங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : விரயங்கள் ஏற்படும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : விரயங்கள் நீங்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 16, 2026
மனதில் இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : குழப்பம் உண்டாகும்.
பூராடம் : அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 16, 2026
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திராடம் : அறிமுகம் உண்டாகும்.
திருவோணம் : இழுபறிகள் மறையும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 16, 2026
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். மனதை உறுத்தி கொண்டிருந்த சில கவலைகள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : கவலைகள் விலகும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 16, 2026
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மறைமுகமாக கிடைக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : தேடல்கள் பிறக்கும்.
ரேவதி : முடிவுகள் கிடைக்கும்.
---------------------------------------