dark_mode
Image
  • Tuesday, 23 June 2026

ராசிபலன் 23-06-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 23-06-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 23-06-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
ஜூன் 23, 2026

மனதளவில் இருந்த குழப்பங்கள் குறையும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விவேகமான செயல்பாடுகள் நன்மையை உருவாக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : குழப்பங்கள் குறையும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 23, 2026

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் திடீர் சந்திப்புகள் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : சந்திப்புகள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : எதிர்ப்புகள் விலகும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 23, 2026

மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். புது விதமான சிந்தனைகள் மனதில் உருவாகும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

மிருகசீரிஷம் : தெளிவுகள் பிறக்கும்.
திருவாதிரை : முடிவுகள் ஏற்படும்.
புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 23, 2026

புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் நெருக்கமும் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 23, 2026

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சு திறமைகள் மூலம் காரியசித்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 23, 2026

சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் ஏற்படும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் வெளிப்படும். தனிப்பட்ட கருத்துக்கள் கூறும்போது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : குழப்பங்கள் ஏற்படும்.
அஸ்தம் : சோர்வுகள் வெளிப்படும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 23, 2026

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : செலவுகளை குறைப்பீர்கள்.
விசாகம் : அனுபவங்கள் உண்டாகும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 23, 2026

மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகளில் சில நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுப காரிய எண்ணங்கள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 23, 2026

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : தீர்வுகள் ஏற்படும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 23, 2026

பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தனிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : மாற்றங்கள் பிறக்கும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 23, 2026

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். செரிமான தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 23, 2026

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி : சஞ்சலங்கள் மறையும்.

---------------------------------------