dark_mode
Image
  • Thursday, 02 April 2026

புதுச்சேரியில் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு: விஜய்க்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு: விஜய்க்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரசாரத்திற்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அதன் கூட்டணிக் கட்சி 2 இடங்களில் களம் காண்கிறது.

விஜய் பிரசாரத்திற்காக 23 இடங்களில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 19 இடங்களுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வெறும் 4 இடங்களில் மட்டுமே பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி வழங்கப்பட்ட இடங்களிலும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரத்திற்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர், விஜய் புதுச்சேரியில் ஒரே ஒரு முறை மட்டுமே பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதுவும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுமதி மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

related_post