நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா
பசும்பொன்னில் நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா (பிப். 23) மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம். .அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நடைபெறும் கூடத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரலில் வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, டிடிவி தினகரனைப் போன்று புதிய அரசியல் கட்சித் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.