ராசிபலன் 02-04-2026 வியாழக்கிழமை
ராசிபலன் 02-04-2026 வியாழக்கிழமை
மேஷம்
ஏப்ரல் 02, 2026
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்து வந்த குழப்பம் விலகும். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதாயகரமான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : குழப்பம் விலகும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 02, 2026
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வது குறித்த சிந்தனைகள் மேம்படும். பயணங்களால் அலைச்சலும் அறிமுகமும் ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : ஏற்ற இறக்கம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 02, 2026
குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : லாபங்கள் மேம்படும்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 02, 2026
எண்ணிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் அனுபவம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : அனுபவம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : வேற்றுமை நீங்கும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 02, 2026
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதார தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மகம் : அலைச்சல் அதிகரிக்கலாம்.
பூரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 02, 2026
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். புதிய செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பயணம் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : சோர்வு நீங்கும்.
சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 02, 2026
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் திருப்தியை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு விரயங்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : புரிதல்கள் உண்டாகும்.
விசாகம் : விரயங்கள் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 02, 2026
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தடங்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
கேட்டை : சாதகமான நாள்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 02, 2026
புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கல்வியில் இருந்து வந்த ஆர்வம் இன்மை குறையும். புதிய வீடு மற்றும் கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மருத்துவ சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் காரிய அனுகூலமும் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மூலம் : ஆர்வமின்மை குறையும்.
பூராடம் : ஆதாயம் கிடைக்கும்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 02, 2026
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவல் பணிகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : துரிதம் ஏற்படும்.
அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 02, 2026
தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பும் பணிகளும் அதிகரிக்கும். வியாபார பயணங்களில் வீண் அலைச்சல்களும் விரயமும் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகள் முலம் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : பேச்சுக்களில் கவனம்.
சதயம் : விரயம் ஏற்படும்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 02, 2026
குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். தெளிவான சில முடிவுகளால் சில தெளிவுகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாக இருக்கவும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : பேச்சுக்களில் கவனம்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------