dark_mode
Image
  • Tuesday, 17 March 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.!

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)யில் இணையும் என பேசப்பட்டு வந்த நிலையில், Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கிய தலைவர்களுடன் இணைந்து விஜய் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தேர்தல் களத்தில் TVK தனது வலுவான இருப்பை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

NDA கூட்டணியில் இணையுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் விருப்பதாரர்களுக்கு நேர்காணல் (Interview) செயல்முறை நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த நேர்காணலில், கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களின் திறன், சமூக பணி, மக்கள் ஆதரவு போன்ற அம்சங்களை மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இந்த நேர்காணல் மூலம் திறமையான மற்றும் மக்கள் நம்பிக்கை பெற்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்ய கட்சி முனைவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் வலுவாக களமிறங்க TVK தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

related_post