dark_mode
Image
  • Thursday, 24 April 2025

பயணிகள் கவனத்திற்கு! பல ரயில் சேவைகளில் மாற்றம்... ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

பயணிகள் கவனத்திற்கு! பல ரயில் சேவைகளில் மாற்றம்... ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

சேலம் ரயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் தற்காலிகாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொது போக்குவரத்து சேவைகளில் மிக முக்கிய முக்கியமானதாக ரயில் சேவை உள்ளது. இதனை தினமும் ஏரளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. ரயில்களின் இயக்கத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயில்களில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு கருதி, பராமரிப்பு, ரயில் பாதை பராமரிப்பு, மின் பராமரிப்பு, பொறியியல் பணிகள் ஆகியவை அவ்வப்போது மேற்கொள்ளப்படும். இதனால் குறிப்பிட்ட ரயில்கள் பகுதியாக அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படும். அந்த வகையில் சேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் பொறியியல் பராமரிப்பு பணிகளின் காரணமாக ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
 
பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16844) ஏப்ரல் 24, 26, மற்றும் 29 ம் தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை – சேலம் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16811) ஏப்ரல் 24, 26, மற்றும் 29 ம் தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, மாயனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16843) ஏப்ரல் 25 ம் தேதி பகல் 1 மணிக்கு திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு, திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

சேலம் – மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16812) ஏப்ரல் 24, 26, மற்றும் 29 ம் தேதிகளில்
வழக்கமாக சேலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்படும் ரயில் சேலம் – கரூர் இடையே ஒரு பகுதி சேவை ரத்து செய்யப்படும். இதற்கு பதில் கரூரில் இருந்து பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

comment / reply_from

related_post