கேள்வி தவறு என்பதால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வுத்துறை அறிவிப்பு..!

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தேர்வில் ஒரு கேள்வி முரணாக இருந்ததால், அந்த கேள்விக்கு என்ன பதில் எழுதி இருந்தாலும் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், "ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைக்கான காப்பகங்களையும் திறந்தார்" என்றும், "அவர் குழந்தை திருமணத்தை எதிர்த்து, விதவை மறுமணத்தை ஆதரித்தார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கேள்வியின் இரண்டு வாக்கியங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்ததை அடுத்து, இந்த கேள்விக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடை திருத்தும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், சமூக அறிவியல் தேர்வில் நான்காவது கேள்விக்கு மாணவர்கள் என்ன பதில் அளித்து இருந்தாலும் அவர்களுக்கு போனஸ் மதிப்பீடாக ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதனால், இந்த கேள்விக்கு மாணவர்கள் தவறான பதில் அளித்து இருந்தாலும் கூட ஒரு மதிப்பெண் போனஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description