dark_mode
Image
  • Tuesday, 16 June 2026

நெல்லை: திசையன்விளை அருகே பனங்காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த காரிலிருந்து 3 கருகிய உடல்கள் மீட்பு

நெல்லை: திசையன்விளை அருகே பனங்காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த காரிலிருந்து 3 கருகிய உடல்கள் மீட்பு

திசையன்விளை காவல் நிலைய சரகம் ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், கார் ஒன்று முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் 4 நபர்கள் இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை செய்ததில், கார் விபத்து காரணமாக எரிந்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இருப்பினும் சம்பவ இடத்திற்கு தடையவியல் அலுவலர் அனுப்பப்பட்டுள்ளார்.
கார் எரிந்ததற்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

related_post