dark_mode
Image
  • Sunday, 24 August 2025
நடிகை ஹன்சிகா அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு  திருமணம்...!

நடிகை ஹன்சிகா அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம்...!

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், இவர் பல டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அது மட்டுமின்றி தற்போது ஹன்சிகாவின் 50-வது படமான 'மஹா' ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹன்ஷிகா திருமண வேளைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளார், ஆனால் திருமணம் அவருக்கில்லை அவரின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு தான்.

மேலும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதை தொடர்ந்து, வரும் மார்ச் 20-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்துள்ள ஹன்சிகாவின் குடும்பத்தினர், 2 நாள் விழாவாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

related_post