நடிகை வனிதா மீது தாக்குதல் : பிக்பாஸ் விவகாரமா ?

நடிகை வனிதா மர்ம நபர் ஒருவர் தன்னை முகத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியதாக X - தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் சர்ச்சைக்கு குறைவில்லாமல் இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தன்னை ஓருவர் தாக்கிவிட்டதாக X- தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில்; நேற்று இரவு பிக்பாஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை முடித்துவீட்டு, சகோதிரியின் வீட்டின் கார் பார்க்கிங் வந்தேன், அப்போது அந்த இருள் சூழ்ந்த இடத்துக்கு வந்த மர்ம நபர், ரெட் கார்டா கொடுக்குறீங்க என்று கூறி கடுமையாக தாக்கினார். என்னால் எதுவும் செய்யமுடவில்லை, ரத்தம் வழிந்த காயத்துடன் தவித்தேன். என் தங்கை போலீஸில் புகார் அளிக்க அழைத்தார். அதில் நம்பிக்கை இல்லையென்று கூறிவிட்டேன். இனி நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் நிலையில் இல்லை. இவ்வாறு பதிவிட்டுள்ளார். வனிதாவை மர்ம நபர் தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description