இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த நடிகர் பாலா

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா, இவர் தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகளை செய்துவருகிறார். தற்போது ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். போதிய வாகன வசதிகள் இல்லாததால் பாம்பு கடி போன்றவற்றால் கிராம மக்கள் உயிரிழக்கும் அவல நிலை இங்கு நிலவுகிறது. இதனை அறிந்த நடிகர் பாலா, ரூ.5 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அந்த கிராம மக்களுக்காக வழங்கியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description