dark_mode
Image
  • Wednesday, 08 October 2025

மேலும் ஒரு வழக்கில் 'பிரியாணி மேன்' அபிஷேக் கைது

மேலும் ஒரு வழக்கில் 'பிரியாணி மேன்' அபிஷேக் கைது

பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் ரபி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி சென்னை சைபர் கிரைம் பிரிவால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது அநாகரீகமாக பெண்களை விமர்சித்தல், பாலியல் துன்புறுத்தல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவிற்கு வரும் பெண்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் ரபி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வழக்கில் 'பிரியாணி மேன்' அபிஷேக் கைது