3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்கும்படி டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்..!!

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப் பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீஸார், நேற்று முன்தினம் காலையில் வாசனை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாசனுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட போதும் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.இதையடுத்து, காலையில் கைது செய்யப்பட்ட வாசன் மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், டிடிஎஃப் வாசன் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி முதல் நாளான நேற்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக அவரது செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீஸார் வாசனுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description