தஞ்சாவூர்: அய்யம்பேட்டை மதகடி ஐய்யங்கர் பேக்கரியில் தீ விபத்து

தஞ்சாவூர்: ஐய்யம்பேட்டை மதகடி ஐய்யங்கர் பேக்கரியில் கேஸ் கசிவால் தீ விபத்து – பெரும் சேதம்
அய்யம்பேட்டை மதகடி பகுதியில் உள்ள பிரபல ஐய்யங்கர் பேக்கரியில் இன்று அதிகாலை கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ மளமளவென பரவியதால், பேக்கரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பேக்கரி பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
தீ விபத்துக்கான முதன்மை காரணமாக கேஸ் கசிவு எனத் தெரிய வந்துள்ளது. இதனால், தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


https://youtube.com/shorts/k8M2VQaTwTM?si=WDLMBE2x5uj-byKD