'டெடி' அப்டேட்: ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'டெடி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து 'டெடி' படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதன் ட்ரெய்லர் நாளை (பிப்ரவரி 22) வெளியாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.