dark_mode
Image
  • Sunday, 24 August 2025
டிக் டாக் புகழ் இலக்கியா வேதனை...!

டிக் டாக் புகழ் இலக்கியா வேதனை...!

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி.கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

படத்தின் நாயகி இலக்கியா பேசும்போது, 'இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் "என்றார்.

related_post