சென்னையில் HCL நிறுவனத்தில் 3 நாள் நேர்முகத் தேர்வு.!பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.!
சென்னை: எச்சிஎல் (HCL Technologies) நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை நாவலூரில் உள்ள நிறுவன வளாகத்தில் ஜூலை 6 முதல் 8-ம் தேதி வரை மூன்று நாட்கள் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Manual Payments பிரிவில் Associate மற்றும் Analyst பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Payments Operations, Banking Operations, Reconciliation, Transaction Processing உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் SWIFT Payment Messaging Standards குறித்த அறிவு, பகுப்பாய்வு திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக தொடர்புகொள்ளும் திறன் அவசியமாகும்.
அதோடு, Microsoft Excel மற்றும் வங்கி/பேமெண்ட்ஸ் செயலாக்க தளங்கள் (Banking/Payments Processing Platforms) குறித்து அறிவு பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
நேர்முகத் தேர்வு ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை, தினமும் காலை 11.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
HCL Technologies Ltd
ETA 3, No.33, Block 1, Sandhya Info City,
OMR Rajiv Gandhi Salai, Navallur, Chennai.
உடனடியாக பணியில் சேர தயாராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட ரெஸ்யூம் மற்றும் தேவையான கல்வி, அனுபவச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை அலுவலகத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணியிடம் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை HCL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.