dark_mode
Image
  • Sunday, 05 July 2026

ராசிபலன் 06-07-2026 திங்கட்கிழமை

ராசிபலன் 06-07-2026 திங்கட்கிழமை

 

ராசிபலன் 06-07-2026 திங்கட்கிழமை

மேஷம்
ஜூலை 06, 2026

கனிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை குறைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : முதலீடுகள் அதிகரிக்கும்.
பரணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
கிருத்திகை : புரிதல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூலை 06, 2026

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : மேன்மை ஏற்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------


மிதுனம்
ஜூலை 06, 2026

விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். தூரதேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : தன்னம்பிக்கை உருவாகும்.
புனர்பூசம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.

---------------------------------------


கடகம்
ஜூலை 06, 2026

வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து செயல்படவும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

புனர்பூசம் : விவேகம் வேண்டும்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


சிம்மம்
ஜூலை 06, 2026

கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பழமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பயணத்திற்கு தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. விவசாய பணிகளில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். பணிகளில் முன்கோபம் இன்றி செயல்படவும். பொழுது போக்கான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : ஆர்வம் ஏற்படும்.
பூரம் : விவேகம் வேண்டும்.
உத்திரம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------


கன்னி
ஜூலை 06, 2026

நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


துலாம்
ஜூலை 06, 2026

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் வருகைகள் உண்டாகும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். பயணங்கள் மூலம் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

சித்திரை : பேச்சுக்களில் கவனம்.
சுவாதி : அனுபவமும் ஏற்படும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 06, 2026

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வமும் விரையமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : புதுமையான நாள்.
அனுஷம் : எண்ணம் மேம்படும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


தனுசு
ஜூலை 06, 2026

கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். ஆபரண சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் அனுபவம் வெளிப்படும். வீடு விற்பனையில் இருந்த தாமதம் குறையும். வரவு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : தாமதம் குறையும்.
உத்திராடம் : ஆதரவான நாள்.

---------------------------------------


மகரம்
ஜூலை 06, 2026

வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணி புரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புத்திரர்கள் வகையில் ஆதாயமுண்டாகும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
திருவோணம் : மதிப்புகள் மேம்படும்.
அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.

---------------------------------------


கும்பம்
ஜூலை 06, 2026

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில அறிமுகங்கள் மூலம் புதுமையான சூழல் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : லாபம் உண்டாகும்.

---------------------------------------


மீனம்
ஜூலை 06, 2026

உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : பயணங்கள் கைகூடும்.
ரேவதி : தெளிவுகள் பிறக்கும்.

---------------------------------------