12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: மத்திய ரிசர்வ் காவல் படையில் 1458 காலியிடங்கள் அறிவிப்பு
இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வரும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுளளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம், கிட்டத்தட்ட 1458 பேர் பணியமர்த்தப் பட உள்ளனர்.
காலியிடங்கள்: 1458
துணை ஆய்வாளர் (சுருக்கெழுத்தர்) - 143
தலைமைக் காவலர் (Ministerial) - 1315
கல்வித் தகுதி: 10+2 தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 25.01.2023 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினர் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்
முக்கியமான நாட்கள்: இந்த பதவிக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 2023, ஜனவரி 4ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 25/01/2023 ஆகும்.
எழுத்துத் தேர்வு, 2023 பிப்ரவரி மாதம் 22-28 வரை நடைபெறும்.
தெரிவு முறை: கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும்.
பணியிடங்களின் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களும், ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
மத்திய ரிசர்வ் காவல் படை
உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளது. இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
1939ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் வெறும் 2 படைப்பிரிவுகளுடன் (பட்டாலியன்கள் ) இப்படை நிறுவப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949ல் மத்திய ரிசர்வ் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு மத்திய ரிசர்வ் காவல் படை என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960களில் இதர மாநிலப்படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.
தற்போது இப்படையின் பிரிவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரில் செயல்பட்டு வருகிறது. எனவே, உள்நாட்டுக் குழப்பம் (355), அதனால் மாநில அரசாங்கத்தை நடத்திச் செல்ல இயலாத நிலைமை (356), ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சி (352), மாநில சிவில் அதிகாரத்திற்கு உதவுவது (Entry 2A of Union list) போன்ற அரசியலமைப்பு மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்காகவும், சட்டம், ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை திறம்பட பராமரிப்பதற்கும் மத்திய ரிசர்வ் காவல் படை செயல்பட்டு வருகிறது.